×

ஒருமையில் பேசும் ‘டீனை’ கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் நர்ஸ்கள் தர்ணா போராட்டம்: நோயாளிகள் கடும் அவதி

சிவகங்கை: ஒருமையில் பேசும் ‘டீனை’ கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை செவிலியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீனாக இருப்பவர் வனிதா. இவர் செவிலியர்களை ஒருமையில் பேசுவது, மிரட்டுவது, செவிலியர் பணி தவிர வேறு பணி வழங்குவது, முக்கியமாக பணிச்சுமையை அதிகரித்து கொடுப்பது போன்ற விரோத போக்குடன் செயல்படுவதாக கூறி, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கம் சார்பில் 200க்கும் அதிகமான செவிலியர்கள், இன்று காலை 7 மணி முதல் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மருத்துவமனை டீன் வனிதா, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்ட செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், காலை 10 மணி வரை டீன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் செவிலியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nurse ,Sivagangai Government Hospital ,Deen , Nurse ,Sivagangai ,Government Hospital ,'Deen'
× RELATED உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து